சென்னையை பூர்விகமாக கொண்ட தமிழர் லண்டனில் துணை மேயராக தெரிவு!
#Governor
#London
#Chennai
Mayoorikka
1 year ago

லண்டன் குராய்டன் Norbury Park Ward இல் சென்னைத் தமிழர் ஒருவர் துணை மேயராக 17/05/2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தாமோதரன் சீனிவாசன் என்ற சென்னையை பூர்விகமாக கொண்ட தமிழர் Kenley Ward இல் கவுன்சிலராக இருந்து துணை மேயராக தெரிவாகியுள்ளார்.
2022 இல் தொழிலாளர் கட்சியின் சார்பாக Norbury Park என்ற Ward இல் போட்டியிட்டு கவுன்சிலாராக தெரிவு செய்யப்பட்டார். இவர் தென் சென்னை மாவட்ட இணை செயலாலராக பொறுப்பு வகித்து வந்த மறைந்த சரோஜினி சீனிவாசனின் மகனாவார்.
அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த உயரிய பதவி தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாக கருதப்படுகின்றது.



