முருக பெருமானின் ஆதி இருப்பிடமான கபிலவன பயணம் 2023

#SriLanka #spiritual
Kanimoli
11 months ago
முருக பெருமானின் ஆதி இருப்பிடமான கபிலவன பயணம் 2023

மறக்க முடியாத அற்புதமான பல அமானுஷ்ய அனுபவங்களை கொண்ட இந்த வருட கபில்வத்தை என்று சொல்லப்படுகின்ற முருக பெருமானின் ஆதி இருப்பிடமான கபிலவன பயணம் 2023 ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பயணிக்கும் அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டு பயணம்.

 (1) இலங்கையில் சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம்.

 (2) ஆதியில் குபேரன் இங்கு வழிபாடு இயற்றியதாக வரலாறு.

 (3) தொடர்ச்சியாக 8 மணிநேரம் இலங்கையில் அடர்ந்த யாள மொனராகலை காட்டுக்குள் பல சிற்றாறுகள், வனங்களை கடந்து பயணித்தால் இயற்கையே கோயிலாக அமைத்த ஒரு அற்புத சித்தர்கள் வனம்.

 (4) எந்த வித வெளியுலக தொடர்புமே இல்லாத சித்தர்களின் புனித பூமி

 (5) முருக பெருமான் தவமியற்றி, அற்புத சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி ஒளியில் கலந்த அற்புத இடம்.

 (6) நவகோடி சித்தர்களுக்கும் முருக பெருமான் தவத்தை கற்று கொடுத்த இடம்.

 (7) போகர் பெருமான் ஆதியில் தவமியற்றிய தபோவனம்

 (8) கதிர்காமத்தில் ஆதியில் இருந்த போகர் பெருமான் நவ பாஷாணங்களை கொண்டு உருவாக்கிய நவ பாஷாண வேல், நவாக்ஷரி யந்திரத்தை மறைத்து வைத்த இடம்.

 (9) கஜபாகு மன்னன் முதல் முதலில் இலங்கையில் கண்ணகி வழிபாடு நடத்திய இடம்.

 (10) இன்று வரை இலங்கையில் சிம்மாசனத்தில் அமரும் அரசர்கள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் இங்கு சென்று வழிபாடு நடத்திய பின் தான் பதவியில் அமர்வது சாசனமாகவே உள்ளது.

 முதல் முதலில் சிங்கள வரலாற்றில் துட்டகைமுனு இங்கு தொடங்கி வைத்தான். இந்த விதிமுறையை. முறையாக ஒருமாத காலம் விரதமிருந்து குறிப்பிட்ட விதிமுறைக்கமைய சென்று வழிபாடு நடத்தினால் கேட்ட வரங்கள் உடனே கிடைக்கும் அற்புத இடம்... (இது வரை என் அனுபவத்தில் பல்லாயிரம் பேரிடம் பார்த்த அனுபவம்.

(12) இன்று வரை வேற்று கிரக வாசிகள் வந்து இறங்கும் அற்புத இடமாக இந்த இடம் போற்ற படுகிறது.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஒருமாத காலம் முறையாக விரதமிருந்து அங்கு சென்று நான் தரிசிக்கும் அபூர்வ இடம்.

 இது என்னுடைய 9வது வருட பயணம். தொடர்ந்தும் அவன் அழைப்பான்... பயணிப்பேன்.... அவன் அழைப்பு இல்லாமல் கனவிலும் கூட யாரும் இங்கு செல்ல முடியாது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.