திருமணத்தில் ஜாலி ஆட்டம் போட்ட பொறியாளர்; மேடையிலேயே திடீர் மரணம்!

#Marraige #Tamilnews #Died #Heart Attack
Mani
2 years ago
திருமணத்தில் ஜாலி ஆட்டம் போட்ட பொறியாளர்; மேடையிலேயே திடீர் மரணம்!

சத்தீஸ்கர்,

லியாக ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் போதே திடீரென சரிந்து உயிரிழக்கும் பகீர் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய அதிர்ச்சிக்குரிய மாரடைப்பு மரணம் ஒன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோத் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ராஜ்குமார், பிலாய் பகுதியில் உள்ள உருக்காலையில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மே 4ம் தேதி தனது நெருங்கிய உறவினரின் திருமணம் நடந்த கிராமத்திற்கு வந்த அவர், அன்று நாள் முழுவதும் உறவினர்களுடன் ஜாலியாக அடிப்பாடி மகிழ்ந்து பொழுதை கழித்தார்.

பின்பு, புதுமண ஜோடியுடன் மேடையில் திலீப் ஜாலியாக குதித்து ஆடினார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்படுபவே, ஆடிக்கொண்டிருந்தவர் மேடையில் அப்படியே சில நொடிகள் அமர்ந்தார். தொடர்ந்து அப்படியே பின்நோக்கி சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் பதறிப்போய் அருகே உள்ள மருத்துவமனைக்கு திலீப்பை கொண்டு சேர்த்தனர்.

திலீப்பின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது, அவரது அன்புக்குரியவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!