நாடு முழுவதும் 7200 தன்சல்கள்: இன்று அவசர பரிசோதனைகளில் பொது பரிசோதகர்கள்

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு நாடு பூராகவும் 7160 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த அனைத்து தன்சல்களும் இன்று பொது பரிசோதகர்களால் கண்காணிக்கப்படும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
அதற்காக 3000 அதிகாரிகள் இணைவார்கள் என்றார். பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தன்சல்களை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும்இ வெசாக் பகுதிகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



