ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை!
#world_news
#Tamilnews
#World
Prabha Praneetha
2 years ago
அமெரிக்காவின் டெக்சாஸில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் எட்டு வயது சிறுவன் ஒருவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டனர்.
அவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரணதண்டனையை போன்று தலையில் சுடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட 38 வயதான சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன் அவர் மீது ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.