யாழில் இரண்டு பிரபல பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக நிதி மோசடி முறைப்பாடு - விசாரணை குழு நியமனம்

#SriLanka
Kanimoli
2 years ago
யாழில் இரண்டு பிரபல பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக நிதி மோசடி முறைப்பாடு - விசாரணை குழு நியமனம்

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுவந்தது.

 அதன் அடிப்படையில் நலமாக கல்வி அமைச்சு கொக்குவில் இந்து கல்லூரியில் இடம் பெற்ற நிதி நிர்வாக முறைகள் விசாரிப்பதற்காக விசாரணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

 இதேவேளை ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், பாடசாலையின் மலர் வெளியீடு ஒன்றுக்காக தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கு ஊடாக வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தினை பெற்று மோசடி செய்ததாக வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் விசாரணை நடாத்துவதற்கு விசாரணைக்குழு ஒன்றினை அமைத்துள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!