தீபாவளி பண்டிகையை பொது விடுமுறையாக அறிவிக்கும் அமெரிக்கா!
#Corona Virus
#SriLanka
#Tamil
#Lanka4
#sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago

மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் பெருநாளாக இந்து மக்களால் இந்த பண்டிகை மதிக்கப்படுகிறது.
மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டாடி இருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



