காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு: காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி! யாழில் ஜனாதிபதியின் ஆலோசகர்

#SriLanka #Sri Lanka President #Jaffna #Ranil wickremesinghe #Missing
Mayoorikka
2 years ago
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு: காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி! யாழில் ஜனாதிபதியின் ஆலோசகர்

தற்போதைய அரசினால் வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நாட்டின் உதவியுடன்அபிவிருத்தி செய்து இலங்கை இந்தியாவிற்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தி வடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த நாங்கள் முனைகின்றோம் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க வேலணையில் தெரிவித்தார்.

 வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பெரும் போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,.

 இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் வடபகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் அதேபோல சமுர்த்தி கிடைக்காத குடும்பங்களும் தமக்கு சமுர்த்தி கிடைக்காமை தொடர்பில் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

 அதாவது விண்ணப்ப படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து உரிய அலுவலருக்கு அனுப்புவதன் மூலம் உரிய முறையில் சமுர்த்தியினை பெற்றுக் கொள்ள முடியும், புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

 அந்த அழைப்பினை அனைவரும் ஒன்றிணைந்து விடுவோம் இங்கே முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு நாம் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுவோம் என்றார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!