பெப்ரல் அமைப்பு பொலிஸ் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள கோரிக்கை!
#SriLanka
#Sri Lanka President
#Election
#Paffrel
#Election Commission
Mayoorikka
2 years ago

பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதன் காரணமாக நடுநிலைமை, கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது சிக்கலாகி வருவதாக பெப்ரல் அமைப்பு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.



