இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறுகிறது.
#SriLanka
Kanimoli
2 years ago
இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறுகிறது. சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரை ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத்தை முன்னிட்டு மே மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.