நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் மோதல் - நால்வர் கைது

#Flight #Arrest #Women #Lanka4 #Fight
Prasu
2 years ago
நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் மோதல் - நால்வர் கைது

விமானத்தில் பெண் உள்பட சிலர் எழுந்து நிற்பதும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக பேசிக்கொள்வதும், குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவதுமான வீடியோ ஒன்று ஆஸ்திரேலிய சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

வீடியோவில் ஹைலைட்டாக பயணி ஒருவரை காலி மதுபாட்டிலால் ஒருவர் தாக்குவது போன்ற காட்சியும் காணப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

இதில் சமூக வலை தளத்தில் வெளியான வீடியோ, குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிக்கு சென்ற விமானத்தில் நடந்தது உறுதிபடுத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் சிலர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களை விமான ஊழியர்கள் அமைதியாக இருக்கும்படி கூறியும் பயணிகள் கேட்கவில்லை. இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பெண் பயணி ஒருவர் தரை இறக்கப்பட்டார். 

அதன்பின்பு மீண்டும் புறப்பட்ட விமானத்தில் மற்ற பயணிகளில் சிலர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி இருந்தனர். இதையடுத்து விமானம் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிக்கு சென்றதும் விமான ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர். 

அதன்பேரில் விமானத்திற்குள் தகராறில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!