உலக ஆயர்கள் மாமன்றத்தில் வாக்களிக்க பெண்களுக்கு அனுமதி - போப் பிரான்சிஸ்

#Election #Women #world_news #Lanka4 #Pop Francis
Prasu
2 years ago
உலக ஆயர்கள் மாமன்றத்தில் வாக்களிக்க பெண்களுக்கு அனுமதி - போப் பிரான்சிஸ்

உலக ஆயர்கள் மாமன்ற கூட்டம் வரும் அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள்மீது வாக்கெடுப்பு நடத்தி, அது போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படும். 

அதன்படி அறிக்கையை அவர் வெளியிடுவார். இந்நிலையில், ஆயர்கள் மாமன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்களை நியமிக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார். இதில் சரிபாதி பேர் பெண்களாகவும் இருப்பார்கள். 

இந்த மாமன்றத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த நிலையில், முதல் முறையாக இந்த மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கி உள்ளார். 

அதன்படி இந்த மாமன்றத்தில் ஆயர் அல்லாத பெண் உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். அத்துடன் 5 கன்னியாஸ்திரிகள் தேர்தல் பிரதிநிதிகளாகவும் நியமிக்கப்படுவார்கள். போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ள இந்த திருத்தத்தை வாடிகன் நேற்று வெளியிட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!