ஹம்பாந்தோட்டையை உலகத்தரம் வாய்ந்த துறைமுகமாக மாற்றுவதற்கு தீர்மானம்

கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக தெற்காசிய பிராந்தியத்தில் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள சீனா வணிகர்கள் குழு நம்பிக்கை கொண்டுள்ளது என அதன் தலைவர் மியாவ் ஜியான்மின் தெரிவித்துள்ளார்.
அதன் தலைவர் மியாவ் ஜியான்மின் அவர்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு விஜயம் செய்து அதன் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து இதனைத் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் சேமிப்பு முனையம், எண்ணெய் ஜெட்டி, வாகன மாற்று முனையம் மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள வரியில்லா வர்த்தக வளாகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் உலகளாவிய பங்காளியாக செயற்படும் சைனா மெர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 25 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 42 துறைமுகங்களின் வலையமைப்புடன், இது தெற்காசியா, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் மற்றும் தென் அமெரிக்காவில் செயல்படுகிறது.



