அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்

#SriLanka #Covid 19 #Covid Variant #Corona Virus #Health
Mayoorikka
2 years ago
அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்

இலங்கையில்  கொவிட் தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் நேற்று புதிதாக பதிவாகிய நோயாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 72,150 ஆகும்.

இந்த நிலையில் கோவிட் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

 சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பலர் கோவிட் நோய் தொற்று பற்றி மறந்துவிட்டதால், பயணத்தின் போது முகக்கவசம் அணிவது, சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார பழக்கங்களை அவர்கள் மறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை   குழந்தைகளை பொது இடங்களிற்கும் அதிக சனநடமாட்டம் உள்ள  இடங்களுக்கும்  அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!