வசந்த கர்ணகொடவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

#America #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
வசந்த கர்ணகொடவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

வடமேற்கு மாகாண ஆளுநரான அட்மிரல் வசந்த கர்ணகொட நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் திரு வசந்த கர்ணகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

 வசந்த கர்ணகொட மற்றும் அவரது மனைவி திருமதி அசோகா கர்ணகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ஜே. பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய வசந்த கர்ணகொட மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!