இன்றைய வேத வசனம் 27.04.2023: இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

#Bible #spiritual #SriLanka #Lanka4 #today verses
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 27.04.2023: இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

இறந்தகால நிகழ்வுகள் வருங்கால வாழ்வின் நம்பிக்கையை ஊட்டும். அவைகள் பின் வரும் தலைமுறைகளுக்கு தேவனை மகிமைப்படுத்த தூண்டும்.

கர்த்தர் யாக்கோபோடு பேசின இடம் தான் பெத்தேல். அங்கே அவன் பெயரும், அந்த சம்பவத்தை நினைவு கூறும்படியாக ஒரு கல்தூணையும் நிறுத்தினான். (ஆதியாகமம் 28:22, 35:14)

தேவன் எகிப்தின் நிந்தையை புரட்டிப் போட்ட இடமாகிய கில்காலில் நாட்டிய கல்தூண் யோர்தானை வெட்டாந்தரை வழியாக கடந்து வந்ததை எடுத்துக்காட்டியது. (#யோசுவா 4:20)

சாலமோனால் நிறுத்தப்பட்ட நினைவு சின்னம் பெலிஸ்தியர் கையிலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை விடுவிக்க இடி முழக்கம் போல முழக்கமிட்டு அவர்களை விழப்பண்ணினார்.

அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். (#I_சாமுவேல் 7:12)

இவையெல்லாம் பழைய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்ட யூதர்களுக்கான நினைவு சின்னங்கள்.

ஆனால் புதிய உடன்படிக்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக வைத்த நினைவு சின்னம்.

பின்பு இயேசு அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து:

இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரிரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

போஜனம் பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். (#லூக்கா 22:19-20)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!