IPL Match36 - 200 ஓட்டங்களை எடுத்த கொல்கத்தா அணி
#India
#IPL
#T20
#Bengaluru
#Kolkatta
#Tamilnews
#Sports News
#Lanka4
Prasu
2 years ago

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி, 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாசினார். கேப்டன் நிதிஷ் ராணா 48 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 31 ரன்கள், ஜெகதீசன் 27 ரன்கள் எடுத்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா, விஜயகுமார் விஷாக் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.



