பரசிட்டமோல் மருந்தை அதிகமாக உட்கொண்டதால் சிறுமி உயிரிழந்தமை குறித்து விசாரணை

#Death #drugs #Investigation #Health Department #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
பரசிட்டமோல் மருந்தை அதிகமாக உட்கொண்டதால் சிறுமி உயிரிழந்தமை  குறித்து விசாரணை

கம்பளை உடவெல்ல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் பரசிட்டமோல் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலை வைத்தியர் சிபாரிசு செய்த மருந்தை வைத்தியசாலையின் மருந்தகத்தில் இருந்து எடுத்து சிறுமிக்கு வழங்கிய போதும் நோயின் தாக்கம் குறையவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனையடுத்து, சிறுமியை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. மருத்துவமனையில் அதிக அளவு மருந்துகள் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி கம்பளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அப்போது மருத்துவர்களால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிறுமி சுயநினைவு பெறாமல் உயிரிழந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!