இலங்கையில் இருந்து 900 கி.மீ தொலைவில் புதிய நில எல்லை
#SriLanka
#sri lanka tamil news
#Earthquake
#Lanka4
Prathees
2 years ago

இலங்கைக்கு 900 முதல் 1000 கிலோமீற்றர் வரையில் புதிய நில எல்லை உருவாக்கப்படும் அபாயம் இருப்பதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.பி. அஜித் பிரேமா கூறுகிறார்.
இதன் காரணமாக இலங்கை பூகம்பங்களை உணரும் நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை 09 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
4 மாதங்களில் குறுகிய காலத்தில் நாட்டில் 09 நிலநடுக்கங்கள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை நாட்டின் உள்பகுதியிலும், மீதமுள்ள நிலநடுக்கங்கள் நாட்டின் கரையோரத்திலும் ஏற்பட்டுள்ளன.



