மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரான தந்தை கைது!

#SriLanka #Arrest #Abuse #Sexual Abuse #Police
Mayoorikka
2 years ago
மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரான தந்தை கைது!

பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தனது 14 வயதுடைய மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுவந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவரும் தந்தையாரை இன்று (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை அவரது தந்தையார் கடந்த 3 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் மேற் கொண்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையாரை சம்பவதினமான இன்று காலை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸதர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!