சில்லறை எரிபொருள் விற்பனைக்கானஒப்பந்தம்: சினோபெக் நிறுவன அதிகாரிகள் இலங்கை விஜயம்
#Sri Lanka President
#SriLanka
#Fuel
Mayoorikka
2 years ago
இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்தக் குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
குழுவுக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று அமைச்சில் இடம்பெற்றது.
அங்கு ஒப்பந்தம் தொடர்பான அட்டவணைகள், ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் அது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மே மாதம் இது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் 45 நாட்களுக்குள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டரில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.