தந்தை செல்வநாயகத்தின் 46 ஆவது சிராத்த நினைவேந்தல் தினம் இன்று இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய இனத்தின் தந்தை செல்வா மூதறிஞர் சா.ஜே.வே செல்வநாயகத்தின் 46 ஆவது சிராத்த நினைவேந்தல் தினம் இன்று யாழ்ஹ துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா நினைவேந்தல் தூபியில் இடம்பெற்றது.அதன்போது தந்தை செல்வாவின் தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரரின் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இவ் நிகழ்வில் முன்னாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான சோ.மாவைசேனாதிராஜா, தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழுவின் தலைவர் கலாநிதி சு.ஜெயநேசன், முன்னாள் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள் உள்ளிட்ட நலன் விரும்பினர்கள் தந்தைசெல்வாவின் நினைவுக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



