புலிகளையும் ரணிலையும் தோற்கடிக்கவே மகிந்தவை ஜனாதிபதியாக்கினோம்: ஜே.வி.பி அதிரடி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Mahinda Rajapaksa
Mayoorikka
2 years ago
புலிகளையும் ரணிலையும் தோற்கடிக்கவே  மகிந்தவை ஜனாதிபதியாக்கினோம்: ஜே.வி.பி அதிரடி

விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்ரமசிங்க ஒப்பந்தம் செய்து நாட்டை பிரிப்பதற்கு நினைத்த வேளை  அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மகிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை 2005ஆம் ஆண்டில் நாம் ஜனாதிபதியாக்கியதும் அவர் பின்னர் திருடியதும் ஒரே விடயம் அல்ல. வேறு வேறு விடயம். நாம் மகிந்தவை ஜனாதிபதியாக்கியது திருடுவதற்கு என்றால் அதை நாம் பாரமேற்போம்.

ரணில் விக்ரமசிங்க விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மகிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம்.

ஆனால், மகிந்த ஆட்சிக்கு வந்ததும் திருட ஆரம்பித்துவிட்டார். அதற்கு எதிராகவும் நாம் போராடினோம். பின்னர் அவரைத் தோற்கடிப்பதற்காகக் களமிறங்கினோம்.

1977ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் ஊழல், மோசடிகளைச் செய்தே உள்ளன.

ஆனால், ஜே.வி.பி. ஆட்சிக்கு இந்த ஊழல், மோசடிகளுக்கு உடன் முற்றுப்புள்ளி வைத்துவிடும்" என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!