லண்டனில் சமுத்திரனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா!

#Event #UnitedKingdom #London #books #world book day
Mayoorikka
9 months ago
லண்டனில் சமுத்திரனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா!

லண்டனில் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் சமுத்திரன் எழுதிய  நான்கு நூல்களின்  அறிமுக விழாவும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு East  Avenue London E12 6SG இல் அமைந்துள்ள Trinity Centre இல் இடம்பெறவுள்ளது,

லண்டன் விம்பம் ஏற்பாட்டில் சமூகம் இயல் பதிப்பக்கத்தின்  ஊடாக இந்த நான்கு நூல்களும் அறிமுக விழா இடம்பெறவுளள்து.

இந்த நூல் அறிமுக விழாவில், எம். ஏ. நுஃமான், எம்.எஸ் தம்பிராஜா, சி.மௌனகுரு, மு.நித்தியானந்தன், தோழர் வேலு, என்.சண்முகரத்தினம் (சமுத்திரம்) ஆகியோரின் உரைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நூல் அறிமுக  விழா கலந்துரையாடலில்  அனைவரும் வருகை தந்து, நூலின் பயன்பாடுகளை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள். 

எழுத்தாளர் சமுத்திரன் எழுத்து துறையில் நிண்டகால அனுபவம் உடையவர்.  இவருடைய நூல்களில் இலங்கையின் சமூக, அரசியல் , பொருளாதார நிலைகளையும் அதனுடன் தொடர்புபட்ட சர்வதேச நிலைமைகளையும் போக்குகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

book launch in London
மேலும் மரண அறிவித்தல்களுக்கு