மேல் மாகாணத்தில் டெங்கு தொற்றுநோய் அபாயம் - இன்று முதல் டெங்கு தடுப்பு சிறப்பு வாரம்
#Dengue
#SriLanka
#sri lanka tamil news
#Health Department
#Lanka4
Prathees
2 years ago

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு தடுப்பு வாரமொன்று இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் தென்மேற்கு பருவமழையுடன் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதே இதற்குக் காரணம்.
இந்த வருட காலப்பகுதியில் நாட்டில் 28,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 49 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவித்தார்.



