IPL Match35 - மீண்டும் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி

#India #IPL #T20 #Mumbai #Gujarat #win #Tamilnews #Sports News #Lanka4
Prasu
2 years ago
IPL Match35 - மீண்டும் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி

ஐ.பி.எல். தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார். 

அபினவ் மனோகர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார். 

அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டாப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 

இதனால் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த அணியில் வதேரா 21 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 33 ரன்கள் எடுத்தார்.

 சூர்யகுமார் 23 ரன்கள் எடுத்தார். இறுதியில், மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்று, புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!