செல்போன் வெடித்து சிறுமி பலி; வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்!

#Tamilnews #Breakingnews #ImportantNews #children
Mani
2 years ago
செல்போன் வெடித்து சிறுமி பலி; வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்!

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல் ஃபோனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி  அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.  இவரது அம்மா  கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் போனை கொடுக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!