புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் எந்தவொரு மறைமுக நோக்கமும் இல்லை - பந்துல

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #srilankan politics #srilanka freedom party #Tamil People #Tamil
Prabha Praneetha
2 years ago
 புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் எந்தவொரு மறைமுக நோக்கமும் இல்லை - பந்துல

 

 மக்களின் உயிரைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்குவதே உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துதற்கான நோக்கமாகும்.

இதில் வேறு எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்பதால் பொறுத்தமான எந்தவொரு திருத்த முன்மொழிவுகளையும் ஏற்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்துள்ளார்.

அதற்கமைய மகாசங்கத்தினர் உட்பட ஏனைய எந்தவொரு தரப்பினரும் திருத்தங்களை முன்வைத்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்குவதே இந்த சட்ட மூலத்தின் நோக்கமாகும்.

எமது இந்த நோக்கத்தில் மாற்றங்கள் இல்லை என்பதால் பொறுத்தமான திருத்தங்களை ஏற்றுக் கொள்ள தயாராகவே உள்ளோம்.

அதற்கமைய திருத்தங்களுடன் உத்தேச புதிய பயங்கரவாத திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

இனினும் இது குறித்து அவரால் அமைச்சரவையில் புதிய காரணிகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் .

 

 

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!