மேல் மாகாணத்தில் நாளை(26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்
#Colombo
#Lanka4
#Dengue
#SriLanka
#sri lanka tamil news
Kanimoli
2 years ago

மேல் மாகாணத்தில் நாளை(26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இவ்வருடம் இதுவரையில் இருபத்தி ஏழாயிரத்து எண்ணூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது DEN 2 மற்றும் DEN 3 வைரஸ்கள் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



