தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் கொழும்பு நீதிவான் விடுத்த உத்தரவு

#SriLanka #Bussinessman #Murder #Court Order #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் கொழும்பு நீதிவான் விடுத்த உத்தரவு

கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஷாஃப்டரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி தினேஷ் ஷாஃப்டரின் மகிழுந்தில் காணப்பட்ட பிறிதொரு நபரின் இரத்த மாதிரியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!