விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்!
#SriLanka
#Sri Lanka President
#Sri Lanka Teachers
#exam
#Examination
Mayoorikka
2 years ago

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இன்று (25) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அவர்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என அதன் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்றி குறிப்பிட்ட பாடங்களின் விடைத்தாள்களை அரசாங்கம் சரிபார்ப்பது சிக்கலாக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.



