கதவடைப்பால் முற்றாக முடங்கிய யாழ்ப்பாணம்
#Jaffna
#strike
#SriLanka
#shop
#Lanka4
Kanimoli
2 years ago

சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் கோரி இன்று யாழ் வர்த்தகர்கள், மற்றும் தனியார் தொழில் நிலையஊழியர்கள் பூரண ஹர்த்தலை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியது.
சங்கானை பகுதியிலும் கடைகள் மூடப்பட்டமையால் சங்கானையும் முடங்கியது.
அதுபோல மானிப்பாயிலும் கடையடைப்பு முன்னெடுத்ததால் மானிப்பாயும் முடங்கியது.



