முதல் காலாண்டில் வரி வருமானம் அதிகரிப்பு
#taxes
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Revenue
Prathees
2 years ago
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 316,619 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருமானம் 46,565 மில்லியன் ரூபாவாக இருந்தது, இது இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 16,619 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது முன்னைய வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 216 வீத அதிகரிப்பாகும் என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக மீண்டு வருதல் மற்றும் வரி நிர்வாகத்தின் வினைத்திறன் அதிகரிப்பு என்பன வரி வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்ததாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.