சாணத்தால் தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் அருண் சித்தார்த்தன் கைது!

#Jaffna #Nallur #Arrest #Court Order #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
சாணத்தால்  தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் அருண் சித்தார்த்தன் கைது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளர் வெட்டிவேலு ஜெயேந்திரனை சாணத்தால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் யாழ்.சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்தன் உட்பட பலரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி ஹோட்டலின் உரிமையாளர் யாழ் சமகி ஜன பலவேக அமைப்பாளர் என்பதுடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக பெண்களை அநாகரீகமாக இழிவுபடுத்தியமையால் யாழ்.மகளிர் அமைப்பு ஒன்றின் பெண்கள் குழுவொன்று அவரை சாணத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிசார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பதில் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

சம்பந்தப்பட்ட சமகி ஜன பலவேக அமைப்பாளர் மீது மலையகத்தில் வழக்கு உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!