தமிழ் போராளிகளுக்கே உதவி செய்யாத சிவாஜி கணேசன். யாழில் மகன் சாட்சியம்

1983ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு நிதி உதவி கேட்டு சில போராளிகள் சென்றிருந்தனர்.
அப்போது அவர்களிடம் “ நானே சாப்பாட்டிற்கு காசு இல்லாமல் கஷ்டப்படுகிறேன். உங்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும?;” என சிவாஜி கணேசன் கேட்டார்.
பெரும் உதவி செய்வார் என நம்பிப்போன அப் போராளிகளுக்கு அவர் தனக்கு சாப்பிடவே காசு இல்லை என்று கூறியது பலத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி வரும்போது இதை கவனித்த சிவாஜி கணேசன் மகன் பிரபு அவர்களிடம் பணம் கொடுத்து உதவியதுடன் “அவர் அப்படித்தான். நீங்கள் இனி என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் வாருங்கள்” என கூறினார்.
சிவாஜி கணேசன் நல்ல நடிகர்தான். ஆனால் அவர் நல்ல தலைவர் இல்லை. அதனால்தான் தமிழக மக்களே அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை நிராகரித்தார்கள்.
நடிகர் எம்.ஜி.ஆரை சாகும்வரை வெல்ல வைத்த தமிழக மக்கள் சிவாஜி கணேசனை ஒருமுறைகூட வெல்ல வைக்கவில்லை.
அப்படிப்பட்ட சிவாஜி கணேசனைப்பற்றி ஆய்வு செய்து நூல் எழுதி அதனை யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடுகிறார்கள். அதற்கு மகன் ராம்குமாரை அழைத்துள்ளனர்.
சிவாஜி கணேசன் சொத்துக்கு சண்டைபோட்டு நீதிமன்றத்தில் இருக்கும் பிள்ளைகளை அழைத்து நூல் வெளியீடு செய்யும் நிலைக்கு யாழ் பல்கலைக்கழகம் ஏன் சென்றுள்ளது என்று புரியவில்லை?



