பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை அறிவிப்பு

#SriLanka #Lanka4 #srilankan politics #sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை அறிவிப்பு

கராச்சி மிருகக்காட்சிசாலையில் ஆபிரிக்க யானை நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை கூறியுள்ளதென லாஹூரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா, அந்நாட்டின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யானைகளுக்கான கோரிக்கை இலங்கைக்கு, அனுப்பப்பட்டுள்ளது. 

யானைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இரண்டு பெண் யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என்று குறித்த ஊடகத்துக்கு கூறிய அவர், அவற்றில் ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றொன்று லாகூருக்கும் வழங்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!