இன்றைய வேத வசனம் 24.04.2023: ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

#Bible #SriLanka #Lanka4 #spiritual #Holy sprit
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 24.04.2023: ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

விவசாயி ஒருவன் சாக்குமூட்டை ஒன்றில் தானியங்களை களஞ்சியத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தான்.

தானியங்கள் அந்த சாக்கினுள் இருக்க முடியாமல் அழுது கொண்டிருந்தன. சாக்கிற்குள் வண்டுகளும், புழுக்களும் இருட்டுமாயிருந்தது சாக்கில் ஒரு துவாரம் இருந்தது.

சில தானியங்களால் உள்ளே இருக்க முடியவில்லை நாங்கள் ஓட்டையின் வழியே தப்பிக்கப் போகிறோம், என்றுச் சொல்லி நழுவி வெளியே ரோட்டில் விழுந்தன குருவிகளும் எலிகளும் அவற்றை தின்று போட்டன.
மூட்டை களஞ்சியத்தில் வைக்கப்பட்டபோது இன்னும் சில தானியங்கள் வெளியே செல்ல நினைத்து நழுவி களஞ்சியத்தின் தரையில் விழுந்தன இப்பொழுது கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது ஆனால் பணியால் வந்து அவற்றை சுத்தம் செய்து சாக்கடையில் போட்டான்.

மற்ற தானியங்களுக்கு நெருக்கடியில் மூச்சு முட்டியது எவ்வளவு நாளோ தெரியாது. என அவை அழுது கண்ணீர் வடித்துக் கொண்டே இருந்தன.

ஒரு நாள் அந்த விவசாயி வந்து மூட்டையை நிலத்திற்கு எடுத்துச் சென்றான். சாக்கை திறந்து தானியங்களை விதைத்தான் தரை அருமையாக இருந்தது காற்று சில்லென வீசியது உண்ண உணவும் குடிக்க நீரும் தரப்பட்டன.

அவை வளர்ந்து வளர்ந்து ஏராளமான விளைச்சலைக் கொடுத்தன மகிழ்ச்சியாக காற்றில் அசைந்தாடின.
இவ்வாறு தான் கடவுளின் கரத்திற்குள் அடங்கி இருப்பது சுலபம்மல்ல வேதனைகளையும் கடினமான நேரங்களையும் சகிக்கத்தான் வேண்டும்.

தப்ப நினைப்போம் ஆனால் ஆபத்தான முடிவை சந்திப்போம்.
ஆனால் கர்த்தருடைய பலத்த கரத்துக்குள் அடங்கி இருப்போமானால் ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார்.

ஆகவே ஏற்ற காலத்திற்காக பொறுமையோடு காத்திருங்கள் கர்த்தர் நம்மை குறித்ததான எல்லா காரியங்களையும் திட்டமிட்டு வைத்திருக்கிறார்.

நாம் அவருடைய கைக்குள் அடங்கி இருந்து அவரையே சார்ந்து இருக்கும் போது ஏற்றுக் காரியங்களை ஏற்ற நேரத்தில் நமக்கு செய்து முடிப்பார்.

ஆகவே அதன் அதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிற தேவனுடைய கரத்தில் அடங்கி இருப்போம்.. ஆமென்!! அல்லேலூயா!!!

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். (பேதுரு 5:6)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!