வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்சின் பிரமாண்ட ராக்கெட்

#America #ElonMusk #Rocket #Blast #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்சின் பிரமாண்ட ராக்கெட்

விண்வெளிக்கு மனிதா்களை அழைத்து செல்லக்கூடிய, மீண்டும் பயன்படுத்தத்தக்க ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட 'ஸ்டாா்ஷிப்' ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் சோதனை தோல்வி அடைந்தது. 

அமெரிக்க தொழில் அதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாா்ஷிப் ராக்கெட், இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் பிரமாண்டமான, அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட் ஆகும். 

சுமாா் 400 அடி நீளம் கொண்ட இதுதான் மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். அதிக உந்து திறன் கொண்ட முதல் நிலை, மனிதர்களையோ, பிற பொருட்களையோ ஏற்றிக்கொண்டு விண்வெளியில் உலா வரும் இரண்டாவது நிலை என்று இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் ஏவப்பட்டால் 150 டன் வரையும், ஒருமுறை பயன்படுத்தினால் போதும் என்றால் 250 டன் வரையும் எடையை சுமந்து செல்லக்கூடிய இந்த ராக்கெட், முதல்முறையாக விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. 

சோதனை முறையில் செலுத்தப்படுவதால் அதில் மனிதா்களோ, செயற்கை கோள்களோ ஏற்றப்படவில்லை. 

இந்தச் சூழலில், முதல் நிலை உந்து பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அந்த சோதனை திட்டம் ஒத்திவைக்கப்பட்டது

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!