இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற தம்பு சேதுபதி

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையில் கௌரவ தலைவராக பொறுப்பேற்று இன்று தனது கன்னி அமர்வை தலைமை தாங்கி நடத்தி இருக்கின்ற திருவாளர் தம்பு சேதுபதி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர் அணியிலிருந்து பல்வேறு பதவிகளை அலங்கரித்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தனது மொழி ஆளுமை மற்றும் நிர்வாக திறன் சிறப்பாலும்செஞ்சிலுவை சங்கத்தின் குறிக்கோள்களை சரிவர நிறைவேற்றுவதில் அவர் கொண்டிருந்த திட சங்கற்பத்தை நாம் அறிவோம்.
விசேடமாக யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் அவர் ஆற்றிய பணிகளால் செஞ்சிலுவை மாவட்ட கிளை அழகு பெற்றது.
உங்களது வழிகாட்டலால் தொண்டர்கள் உயர்வு பெற்றனர். வாழ்வில் சிறப்பு பெற்றனர் . மக்கள் மனிதநேய பணிகளை அனுபவிக்கும் சந்தர்ப்பம் பெற்றனர்.
மனித நேயத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் நீங்கள் மாவட்ட கிளையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
கிளிநொச்சி மண்பெருமை கொள்கிறது..தங்களுக்கும் தங்களுடைய மாவட்டக் கிளையின் நிர்வாகத்தினருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
இவருடைய பரிந்துரையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக பலர் நிதி உதவி செய்துள்ளனர்.இவருடைய உதவிகள் அறியதாக சென்றடைந்துள்ளது.
இளைஞர்கள் யுவதிகள் வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்து வளந்தவர்கள் லட்சக்கனக்கான தொகைகளை செஞ்சிலுவைச் சங்கம் கிளிநொச்சி கிளை சேதுபதி அவர்களின் ஊடாக பலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பங்களிப்பு கட்டாயம் கிளிநொச்சி மக்களுக்கு தேவை மற்றும் இவர் ஒரு பாடசாலையில் உதவி அதிபராகவும் கடமையாற்றி கொண்டிருக்கிறார் என்பதையும் சிறிய வயதில் இருந்து இவருக்கு பொது தொண்டுகளில் ஈடுபாடுகள் இருந்ததாகவும் அந்த காரணத்தினாலே இந்த சங்கத்தில் இணைந்து இவர் பொறுப்பாக இந்த சேவையை ஆற்றிக்கொண்டிருக்கிறார்.
மேலும் இவருக்கு Lanka4 ஊடகம் கிளி நாயகன் என்னும் பட்டத்தை வழங்கி கெளரவிக்கின்றது.


















