நான்கு பிள்ளைகளின் தாய் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை

#Death #Police #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
நான்கு பிள்ளைகளின் தாய் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான லெச்சுமன் நிஷாந்தனி (வயது 34) என்பவர் டொவன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார்.

குடும்பத் தகராறு தொடர்பாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பின்னர் நான்கு பிள்ளைகளின் தாயான இவர் தனது குழந்தை ஒருவருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

குழந்தையை  தண்ணீர் கொண்டு வரச் சொல்லிவிட்டு, குழந்தை அந்த இடத்தை விட்டு வெளியேறிய பிறகு  தாய் டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளார்.

தாயுடன் சென்ற குழந்தை மீண்டும் பொலிஸாரிடம் ஓடிச்சென்று தாயார் அருவியில் இருந்து கீழே குதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படும் நான்கு பிள்ளைகளின் தாயின் சடலத்தை கண்டுபிடிப்பதற்காக திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!