சமூக ஊடக ஆர்வலர் ஒருவரின் காணொளி தொடர்பில் சிஐடி விசாரணை
#Investigation
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
சமூக ஊடக ஆர்வலர் ஒருவர் காணொளி மூலம் பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ்பேர்ல் கப்பலின் பிளாஸ்டிக் தகடுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர அறிவுறுத்தல்களை வழங்குவதில் அரசாங்கத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் தங்கள் சொந்த லாபத்திற்காக செயல்பட்டனர். சமூக ஊடக ஆர்வலர் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.