கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மீண்டும் கோளாறு!

#SriLanka #Airport #Dubai #Flight #AirCraft
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மீண்டும் கோளாறு!

துபாய்க்கு புறப்பட்ட இலங்கை விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணி 06 நிமிடங்களின் பின்னர் விமானத்தின் உள்ளே குறைந்த காற்றழுத்தம் காரணமாக மீண்டும் திரும்பி நேற்றிரவு 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதையடுத்துஇ விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கையின் பொறியியலாளர்கள் குழுவொன்று தேவையான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இந்த விமானத்தை சரிசெய்து வருகிறது.

இதையடுத்து, இந்த விமானத்திற்கு பதிலாக ஏ-330 என்ற இலங்கை விமானம் இன்று (22) காலை 11.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு பயணிகளை ஏற்றிச் செனறுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!