அதிகரிக்கும் வெப்பநிலை: யாழ்ப்பாணத்தில் நுங்கு விற்பனை சூடுபிடிப்பு!
#SriLanka
#Jaffna
#hot
#sun
#water
Mayoorikka
2 years ago
கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து காணப்படுகிறது.
அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் எடுத்தும்,உட்கொண்டும் வருகின்றனர்
ஒரு நுங்கானது 100ரூபா முதல் 150ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனை பலர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.