பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுக்கும் வர்த்தகர்கள்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#United States Ambassador to Sri Lanka
Prabha Praneetha
2 years ago

நிறை அடிப்படையில், முட்டைகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம், நடைமுறை ரீதியான பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
சில வர்த்தகர்கள் பயன்படுத்தும் தராசுகள் உரிய தரத்தில் இல்லாமையால், கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலைக்கு முட்டையைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் வித்தானகே தெரிவித்துள்ளார்.
முட்டையை நியாயமான விலைக்குப் பெற்றுக்கொள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முட்டை மாபியாவினைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு நன்மையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



