அஷ்வசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அஷ்வசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தை ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி , பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 4 சமூகக் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள சுமார் 16 000 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
அதற்கமைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வீதம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
ஏழைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு 8500 ரூபா வீதம் 2023 ஜூலை 31 முதல் 3 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மிகவும் ஏழைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 இலட்சம் குடும்பங்களுக்கு 15 000 ரூபா வீதம் 2023 ஜூலை 31 முதல் 3 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதே வேளை மாற்றுத்திறனாளிகள் , கண்டறியப்படாத சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.
தற்போதும் உதவி பெறுகின்ற 72 000 மாற்றுத்திறனாளிகளுக்கும் , 39 150 சிறுநீரக நோயளர்களுக்கும் தலா 5000 ரூபாவும் , 416 667 முதியோருக்கு 2000 ரூபாவும் ஒரு மாதத்திற்கு வழங்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



