ஈஸ்டர் தினத்தன்று பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறிய நபர் கைது

#Arrest #Police #Muslim #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
ஈஸ்டர் தினத்தன்று பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படும் என  கூறிய நபர் கைது

ஈஸ்டர் தினத்தன்று அக்குறணை முஸ்லிம்  பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படும் என பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் இன்று அதிகாலை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான மௌலவீ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் செய்த தொலைபேசி அழைப்புகள் போலியானவை என தெரியவந்துள்ளது

அந்த அழைப்பு கிடைத்ததையடுத்து, கண்டி பிரதேசத்தில் உள்ள இருநூறு தேவாலயங்களுக்கு விசேட பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு அனுப்பப்பட்டது.

அதுமட்டுமின்றி பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பல இஸ்லாமிய பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!