பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
#SriLanka
#Terrorist
#Sri Lanka President
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்து மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளான பிரஜைகளின் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மற்றும அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை என்பன குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்களால் இரத்து செய்யப்பட்டமைக்கு இலங்கை சமூகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் காரணமாக நிபுணர் குழு மூலம் இந்த சட்டமூலத்தில் உள்ள பொருத்தமற்ற சரத்துக்களை நீக்குவது பொருத்தமானது எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.