பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் போல் நடித்த ஒருவர் கைது

பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளராக நடித்த நபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலணி அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஆபாசமாக பேசி அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால், ஹலவத்தை, கொட்டாரமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் போல் நடித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு சில அழுத்தங்களை பிரயோகித்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



