இன்றைய வேத வசனம் 22.04.2023: கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர் தன் மகனுக்கு பெண் தேடினார்கள். மகன் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருந்தான். ஒரு பெண் வீட்டிற்குச் சென்று பெண் பார்த்தார்கள் அவள் தேவப் பயமுள்ளவளும், குணவதியுமாய் இருந்தாள்.
போய் பதில் சொல்லுகிறோம் என்று வீட்டிற்கு வந்தார்கள் தாம் எதிர்பார்க்கும் வரதட்சனை கிடைக்காது என்பதால் பதில் சொல்லாமலிருந்து விட்டனர்.
பணம் மிகுந்த செல்வந்தர் ஒருவர் அவர்கள் மகனை மருமகனாக்கி கொள்ள விரும்பி ஏராளமான நகைகள் கார் பங்களா சொத்து தருவதாக வாக்களித்தார். இந்த பெற்றோரும் உலக பொருட்களுக்கு ஆசைப்பட்டு கர்த்தரின் சித்தம் அறியாமல் மகனுக்கு செல்வந்தரின் மகளை மனம் முடித்தனர்.
கொஞ்ச காலத்திற்குக் கூட அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மனைவியின் வற்புறுத்தல் காரணமாக மகன் பெற்றோரை முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டு, மனைவியோடு பெரிய பங்களாவில் வாழ ஆரம்பித்தான். சிறிது காலத்தில் அவர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டு விவகாரத்து செய்து பிரிந்து வாழ ஆரம்பித்து விட்டனர்.
திருமணங்கள் கர்த்தரின் சித்தம் அறிந்து செய்யப்பட வேண்டுமேயென்றி பணத்தை பார்த்து செய்யக் கூடாது. ஆண்டவரின் சித்தப்படி நடக்கும் திருமணங்கள் விவாகரத்து பெயரில் முறிந்து போவதில்லை ஆமென்!! அல்லேலூயா!!!
கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். (#ஏசாயா 53:10)



