பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் காலமானார்!
#Tamilnews
#ImportantNews
#Cinema
#Kerala
Mani
2 years ago

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
அவருக்கு வயது 93. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாத்திமா காலமானார்.
இறுதிச் சடங்குகள் கோட்டயத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவர் தனது மூத்த மகன் மம்முட்டி மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் மம்முட்டியின் தாயாரின் மறைவிற்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.



